அண்ட்ரோய்ட் 1000 கோடி


அண்ட்ரோய்ட் கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட்களுக்கான அப்பிளிகேசன் சந்தையில் இருந்து (Android Market) இதுவரை சுமார் 10 பில்லியன் அதாவது 1000 கோடி அப்ளிகேசன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் உத்தியோகபூர்வமாக
அறிவித்துள்ளது. .



இது அண்ட்ரோய்டின் வளர்ச்சிப் பாதையில் புதியதொரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றது. 


இவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்ட அப்ளிகேசன்களில் அதிகப்படியானவை தென்கொரியாவில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 

 

இதற்கு அடுத்தப்படியாக ஹொங்கொங், தாய்வான், ஆகிய நாடுகள் உள்ளன. எனினும் அமெரிக்க இவ்வரிசையில் 4 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது. 

இவற்றில் கேம்ஸ்களே அதிகப்படியாக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தரவிறக்கங்களில் 25.6% ஆகும். 

 

இதனைத்தவிர பொழுதுபோக்கு, மற்றும் டூல்ஸ் என்பன அடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. 

அப்பிளின் அப் ஸ்டோரிற்கு இதே சாதனையை எட்டிப்பிடிக்க 2.5 வருடங்கள் தேவைப்பட்டது. மேலும் கடந்த ஜனவரி அப்பிளின் 'அப் ஸ்டோர்' 15 பில்லியன் என்ற தரவிறக்கங்கள் என்ற இலக்கினை எட்டியது. 

இதனை அண்ட்ரோய்ட் கூடிய விரைவில் முறியடிக்குமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவ்வருடம் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அண்ட்ரோய்ட் சந்தையிலிருந்து 4 பில்லியன் வரையான அப்ளிகேசன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 

 

எனினும் 20 மாதங்களின் பின்னரே முதல் 1 பில்லியன் அப்ளிகேசன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டதாக கூகுள் தெரிவிக்கின்றது. 

தினசரி 5 லட்சம் அண்ட்ரோய்ட் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில் அண்ட்ரோய்ட் கூடிய விரைவில் மேலும் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டலாம். 

கையடக்கத்தொலைபேசிகளை கொள்வனவில் தற்போது இயங்குதளங்கள் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றதோ அது போலவோ அப்ளிகேசன்களும் தாக்கம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. _