இது எப்படி சாத்தியமானது? சீனாவில் அதிசயம்

கிழக்கு சீனாவில் உள்ள Zheijiang மாகாணத்தின் Taizhou என்ற இடத்தில் உள்ள residential tower ஒன்று பிரமாண்ட கிரேனின் உதவியுடன் அழிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அதிகமான நிறையைக் கொண்ட கிறேன் மாடியின் உச்சியில் இருந்து வேலை செய்கிறது.
கடலை நோக்கி இருக்கும் இந்த அழகான ஆடம்பர குடியிருப்பு கடந்த ஜனவரி மாதம் கட்டி முடிக்கப்பட்டது.
கட்டி முடித்து சில மாதங்களின் பின்னர் தான் கட்டிடம் ஒருபக்கம் சரிந்து இருக்கின்றமை கண்டு பிடிக்கப்பட்டது.




குறித்த கட்டிடத்தை அழிக்க டைனமற்றை பயன்படுத்தாதது ஏன் எனத் தெரியவில்லை? கட்டிடத்தின் மேற்பகுதியில் கிறேனை நிறுத்தி அதன் உதவியுடன் ஊழியர்களால் அழிக்கப்பட்டு வருகின்றது.
நான் 16 ஆவது மாடியில் வீடு ஒன்றை வாங்கினேன். அங்கிருந்து பார்த்தால் கடல் அழகாகத் தெரியும். ஆனால் அங்கு துரதிஷ்டவசமாக வாழ என்னால் முடியவில்லை என்று Zhan என்பவர் சைனா டெயிலி என்ற பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்தில் ஒரு சதுர அடி 500 ஸ்டேர்லிங் பவுண்களுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறெனினும் பலமாடிக் கட்டிடத்துக்கு பாரம் மிக்க கிறேனை எப்படிக் கொண்டு போய் இருப்பார்கள் என்பதில் இன்னமும் வியப்பு ஆச்சரியமுமே மிஞ்சுகிறது.
தொழில் துறையில் சீனாவின் அபார வளர்ச்சிக்கு இது ஒரு நிஜமான சாட்சி.