இன அழிப்புநிலப் பறிப்பு இவற்றை தடுப்பதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு சொல்கிறது. புளுக்குணாவையில் ஆட்லறியை வைத்து தலைவர் அடித்தார் தானே? சிங்களவர்கள் விட்டுவிட்டுப் போனார்களா? இதனை விடவும் என்ன செய்வது என கிழக்கு மாகாண முதலமைச்சர்சி. சந்திரகாந்தன்
கேள்வியெழுப்பியுள்ளார்.
கேள்வியெழுப்பியுள்ளார்.
கொக்கட்டிச்சோலையிலுள்ளகருணா அம்மான் பிரதேச கலாசார நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மட்டக்களப்புமேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் அதிபர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வில் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.













இங்கு தொடர்ந்தும்உரையாற்றிய அவர்
கடந்த கால அரசியல் போர்ச்சூழல் காரணமாக மிக மோசமாகபின்னடைவைச் சந்தித்த பகுதியாக கொக்கட்டிச்சோலை வவுணதீவு கரடியனாறு வாகரை பகுதிகளைச்சொல்லலாம்.
அந்த அடிப்படையில் எமது சமூகத்தை கட்டியெழுப்புகின்ற பணிகள்அந்தப்பகுதிகளிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அந்தஅடிப்படையில் ஆரம்பம் கல்வி தான். அதற்கு அஸ்திவாரமாக நாங்கள் கணிசமான விடயங்களைமுன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால்கல்குடா வலயம் சிறந்த நிர்வாகத்தை கொண்டு இயங்குகிறது.
ஆசிரியர் தட்டுப்பாடு அதே போன்றுநிர்வாக ரீதியாக இரண்டாவது நிலையில் மண்முனை மேற்கு கல்வி வலயம் அமைந்திருக்கிறது. அங்கும்ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுகிறது. இம்முறை இடமாற்றத்திலே பாடரீதியான பின்னடைவுகள்இருந்தாலும் ஆரம்ப பாடசாலை ரீதியிலான பற்றாக்குறை நீங்கும்.
2012 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பாட ரீதியிலானஆசிரியர்களையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார். நாங்கள்நடவடிக்கை எடுக்கின்றோம். 2012ஆம் ஆண்டு நிர்வாக ரீதியாக இல்லாதஆண்டாக மாற வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பாகும்.
கடந்த போர்ச்சூழல் காரணமாகஉட்கட்டுமான சிதைவுகள் கணிசமான நடந்தன. குறிப்பாக போக்குவரத்துப் பிரச்சனையை கூறலாம்.போக்குவரத்துப் பிரச்சனையும் 2013 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எல்லாப் பாதைகளும் அதுவும் முடிந்தால் பெரிய மாற்றம் ஏற்படும் என்பதில்ஐயமில்லை.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு 15 தடவைகள் அரசுடன் பேசியிருக்கிறார்கள். இவ்வளவு காலமாக என்ன பேசினார்கள்என்று எனக்குத் தெரியாது. அது அரியநேத்திரன் ஐயாவுக்குத் தெரியுமா? மக்களாகிய உங்களுக்குத்தெரியுமா? இல்லை. மக்களுக்கு எந்த விடயங்கள் குறித்துப் பேசுகிறார்கள் என்பது பற்றிஅறிவிக்கவில்லை.
தந்தை செல்வாவின்வழியில் அரசியல் செய்கிறோம் கொள்கைக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்என்கிறார்கள். அரசியல் தீர்வுகுறித்து என்ன திட்டத்தினை வைத்திருக்கிறார்கள்?
'சி.எம்.(முதலமைச்சர்)அபிவிருத்தி என்றுகொண்டு திரிகிறார். அரசியல் தீர்வு விடயத்தில் எந்தவிதமான அக்கறையும்இன்றி பின்னுக்கு நிற்கிறார்' என்று த.தே.கூட்டமைப்பு சொல்கிறது. இதுவரை நாங்கள் படித்ததந்தை செல்வாவின் வரலாறு என்று பார்த்தால் இரண்டு ஒப்பந்தங்களைச் சொல்வார்கள். அவைபண்டா- செல்வா ஒப்பந்தம் டட்லி-செல்வா ஒப்பந்தமாகும்.
இதில் பண்டா-செல்வா ஒப்பந்தத்தைப் பார்த்தீர்களென்றால் அது மாவட்ட சபையைப் பற்றிச் சொல்கிறது.ஆகக் குறைந்த அதிகாரம் கொண்டது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் 13ஆவதுதிருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் அதனைவிடவும் மிக மிக அதிகமானது.
77ஆம் ஆண்டு தமிழர்விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எடுத்து பார்த்தீர்களென்றால் பைத்தியம்பிடிக்கும். வட்டுக் கோட்டை தீர்மானத்தை எடுத்து விட்டு தமிழ் முஸ்லிம்களுக்கும் சமபங்கு சுவிட்ஸர்லாந்தைப் போல சமஷ்டியாம். எல்லோரும் தேர்தல் விஞ்ஞாபனம்விடுவார்கள் தான். அவ்வளவு எழுதிவிட்டு நடத்தின நாடகம் எல்லாவற்றையும் செய்துவிட்டுஅவர்களது வாரிசாக இருக்கிற சம்பந்தன் ஐயா போன்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதெரியாது.
தொடர்ந்தும்மக்களை அழிப்பதற்கு துணைபோகமுடியாது. ஒரு தலைவர் பிழைவிட்டால் அது அவர்களுக்குப்பிரச்சினைஇல்லை. எங்களது சமூகத்துக்குப் பிரச்சினை. இதற்கு விடமுடியாது. காசியானந்தன் மீண்டும் புலிவரும் மீண்டும் வெடி வெடிக்கும் மீண்டும் தமிழீழம் வரும் என்று பேசியிருக்கிறார்.
இவ்வாறு பேசிவிட்டுநாடுகடந்த தமிழீழத்தார் பணம் போடுவார்கள் அவர்களுடைய வங்கிக் கணக்குகளைநிறைவேற்றிக் கொண்டு இருப்பதற்கு நினைக்கின்றனர்.
கிழக்குபிரிக்கப்பட்ட பின்னர் நமக்கு தனித்துவமான அரசியல் தேவை. அதற்கான தலைமைகள் தேவைஎன்பதே எமது நோக்கம். மாகாண சபை நாடாளுமன்றத் தேர்தல்களிலே எங்களை வெற்றிபெறச்செய்து பாருங்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றித் தருகிறேனா இல்லையாஎன்று. இல்லாவிட்டால் அந்த இடத்திலேயே கல்எறிந்து கொல்லுங்கள் என்றார்.
முனைக்காட்டைச்சேர்ந்த தற்போது சுவிஸ்லாந்தில் வசிக்கும் தா.வேதநாயகம் மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்தமத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க அவுஸ்திரேலியக் கிளையின் நிதியுதவியுடன் இந்தநிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த கௌரவிப்புவிழா மட்டக்களப்பு கல்வி வலயம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெறும் முதலாவதுநிகழ்வென்பதும் 43 மாணவர்கள் சித்தியடைந்தனரென்பதும் கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலய மாணவனான சண்முகராஜா சஞ்சஜன் 177 புள்ளிகளைப்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.